Thursday, February 17, 2011

வே. மாசிலாமணி

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையும் அதன் சுற்று சூழலையும் கண்டு பரவசமானார் . பல இயற்கை வளங்களைக் கண்ட இவர் படைப்பின் அற்புதங்களைச் சிந்தித்து தன விடுதிக்குச் சென்று இந்த கீர்த்தனை இயற்றினார். பேசில் மிசினில் திருவண்ணாமலை போன்ற சந்தைகள் கூடும் இடங்களில் நற்செய்தி கூறி வந்தவர்.

Tuesday, November 17, 2009

ஞா.சாமுவேல்

அருள் திரு ஞா.சாமுவேல் ஐயர் தரங்கம்பாடி மற்றும் பெங்களூர் இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். தன வாழ்கையில் தொடர்ந்து வந்த துன்பங்களால் சோர்வுற்று ,ஒரு மாலை மயங்கும் வேலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது, பாதையில் கிடந்த காகிதத் துண்டில் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது.

அப்பொழுது யோபுவின் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தார். தன வாழ்க்கையை யோபுவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அணைத்து பாடுகளின் மத்தியிலும் மனந் தளராது இவ்வாறு சாட்சி பகர்ந்த யோபுவின் வாழ்க்கை அவருக்கு புத்துணர்ச்சி அளித்தது. இப்பாடலை எழுதினார். அவர் எழுதிய பிற பாடல்கள் குணப்பாடு பாவி ஆகியவை ஆகும்

Monday, November 16, 2009

பிரிக்கன்ரிஜ்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ,யாழ்பாணத்தில் கொலைக் குற்றதிற்காகத தூக்குத் தண்டனை பெற்ற கைதி தான் பிரிக்கன்ரிஜ் என்பவர். அவரை சிறைச் சாலையில் நற்செய்திப் பணி அறிவிக்கும் ஒருவர் சந்தித்து இயேசு உங்ககளை நேசிக்கிறார் என்று கூறிய போது உண்மை தானா என்று வினவினார். நற்செய்திப் பணியாளர் இப்புத்தகத்தில் உள்ள அனைத்தும் உண்மையே என்று வேதப் புத்தகத்தைக் காட்டினார்.
பல வாரங்கள் இருவரும் வேத புத்தகத்தை வாசித்து சிந்தித்தனர். தூக்குத் தண்டனை நிறைவேறும் நாளுக்கு முன்னர் ,அக்கைதி ஆண்டவரை ஏற்றுக் கொண்டு, ஞானஸ்தானம் பெற்று பிரிக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.
அவரைத் தூக்கிலிட்ட பின் அவரது உடமைகளை எடுத்துச் செல்ல அவரது உறவினர்கள் வந்தபோது தலையணைக்குக் கீழே இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார் என்ற பாடல் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது .இது 1தீமோத்தேயு 1:15 வை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

Friday, August 7, 2009

நீ எழுந்து

கர்த்தர் நம்மை நோக்கி நீ எழுந்து சில காரியங்களைச் செய் எனக் கட்டளையிடும் போது கீழ்ப்படிந்தால் , விடுதலையையும் ஆச்சரியமான ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள முடியும் .



நியாதி5:7
தெபோராளகிய நான் எழும்புமளவும் இஸ்ரவேலாகிய நான் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்ப் போயின


நியாதி 5:4
தெபோராள் தீர்க்கதரிசி யானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.


நியாதி 4:1
இஸ்ரவேல் புத்திரர் திரும்ப கர்த்தரின் பார்வைக்கு பொல்லாங்கானதை செய்ததால்


நியாதி 4:2
கர்த்தர் அவர்களை ஆத்சோரை ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய
கையிலே விற்றுப் போட்டார் .சிசேரோ யாபீன் ராஜாவின் சேனாதிபதி அவன் அரோசேத்திலே குடியிருந்தான் .அவனுக்கு தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தன . அவன் இஸ்ரவேல் ஜனங்களை இருபது வருடம் ஒடுக்கினான்.



இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்

கர்த்தர் தெபோராள் என்ற தீர்க்கதரிசியோடு இடைப்பட்டார் . தெபோராள் கர்த்தரால் யுத்தத்திற்கு தெரிந்தெடுக்கப் பட்ட பாராக்கை வரவழைத்து பதினாயிரம் பேரை நப்தலி புத்திரரிலும் ,செபுலோன் புத்திரரிலும் தெரிந்தெடுத்து கூட்டிக் கொண்டுநாகோர் மலைக்குப் போகக் கடவோம் என்றும் நியாதி 4:7


நான் யாமீன் சேனாதிபதியாகிய சிசேராவையும் அவன் ரதங்களையும் அவன் சேனையையும் aஉன்னிடத்திற்கு வரவழைத்து அவனை உன் கையில் ஒப்புக் கொடுப்பேன் என்றும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிடவில்லையா என்றாள்.

நியாதி 4:14 அப்பொழுது தெபோராள் பாராக்கை நோக்கி எழுந்து போ .கர்த்தர் சிசேராவைக் கொடுக்கும் நாள் இதுவே . கர்த்தர் உனக்கு முன்பாக புறப்படவில்லையா என்றாள்.


அப்படியே பாராக் தன் சேனையோடு எழுந்து aபோய் சிசரோவவைத் தோற்கடித்தான் .aஎல்லா சேனைகளையும் பாராக்குக்கு முன்பாக பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் .



தெபோராளை கர்த்தர் பாராக்கோடு போகும் படி சொல்லவில்லை .ஆனால் பாராக் கேட்டுக் கொண்டதன் படி தெபோராளூம் பாராக்கோடே போனாள்.
சிசொரா ரதத்தை விட்டிறங்கி கால் நடையாய் ஓடிப் போனான் .ஓடிப் போனவன் யாகேலுடுய கூடாரத்தில் ஓடிப் போய் அடைக்கலம் கேட்டான் .யாகேல் என்ற பெண்ணினால் கூடார ஆணியால் கொல்லப்பட்டான் நியாதி 4:21




பாராக் தெபோராளின் தீர்க்கபோகாமல் போகாமல் கீழ்ப்படிந்ததால் ஜனங்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது



கர்த்தர் யோனாவிடம் இடைப்பட்டார்


யோனா தீர்க்கதரிசன ஆகமத்தில் ஒரே ஒரு தீர்க்கதரிசனத்தை மையமாகக் கொண்டது. அந்த ஒரு தீர்க்கதரிசனத்திற்கு கீழ்ப்படிந்ததால் நினிவே மக்கள் மனம் திரும்பி கர்த்தரண்டைக்கு வந்து பெரிய அழிவில் இருந்து தப்பினர்

யோனா 1:2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய் அதற்கு விரோதமாக பிரசங்கி . அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார் .




யோனா 3:2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்கு கற்பிக்கும் வார்த்தையை ,கர்த்தர் விரோதமாய்ப் பிரசங்கி



நினிவேக்கு போகாமல் தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறிய யோனாவை திரும்பவும் நினிவேக்கு அழைத்து வந்தார். யோனா சாரிபாத் விதவையின் மகன் என சிலர் குறிப்பிடுகிறார்கள்



யோனா புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசன வசனம் யோனா 3:4 "இன்னும் நாற்பது நாள் உண்டு அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டு போம் " என்பது தான்.



பழைய ஏற்பாட்டில் 12 தீர்க்கதரிசன ஆகமங்கள் உள்ளன. 11 ஆகமங்களில் அநேக தீர்க்க தரிசனங்கள் உள்ளன. ஏசாயா எரேமியா அநேக தீர்க்கதரிசனங்களும் தீர்க்கதரிசிகளும் இருட்ன்தும் இஸ்ரவேல் ஜனங்கள் மனம் திரும்பவில்லை. பாவத்தை அதிகரிக்கப் பண்ணினார்கள். திரும்ப திரும்ப பாவம் செய்தார்கள் .

யோனா புத்தகத்தில் ஒரே ஒரு தீர்க்கதரிசனம் ,ஜனங்கள் .ராஜா கேட்டபோது மனம் திரும்பியதால் அழிவின்று தப்பினார்கள்.
யோனா 3:3 மூன்று நாள் பிரயாண விஸ்தாரமாகிய மகா பெரிய நகரமாயிருந்தது .

யோனாவின் பிரசங்கம் ஒருவருக்கொருவர் பரிமாரிக்கொள்ளும் படியான மிகவும் எளிமையான தீர்க்கதரிசன மாயிருந்தது.

தீர்க்கதரிசனத்தைக் கேட்டு கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து ,மனந்திரும்புதலுக்காக உபவாசம் செய்யும் படியாக ஜனங்கள் தீர்மானித்தார்கள். யோனா 3 : 5

இந்த செய்தி நினிவேயின் ராஜாவை எட்டின போது (3 : 6 ) எனக் கூறப்படிருப்பதால் யோனா ராஜாவிடம் போய்ச் சொனதாக குறிப்பிடவில்லை என எடுத்துக் கொள்ளலாம்.

ராஜா தன சிங்காசனத்தை விட்டு எழுந்து தான் உடுத்தி இருந்த உடுப்பை கழற்றிப் போட்டு இரட்டை உடுத்திக் கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.
யோனா 3 :7 மேலும் மனுஷரும், மிருகங்களும் மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசி பாராதிருக்கவும் ,மேயாமலும் தணீர் குடியாமலும் இருக்கவும்

யோனா 3: 8 மனுஷரும் .மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு தேவனை நோக்கி உரத்த சத்தமாய் கூப்பிடவும் அவரவர் தம் தம் பொல்லாத வழியையும் தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டு திரும்பக் கடவர்கள். என ராஜா ,தானும் தன பிரதானிகளும் , நிர்ணயம் பண்ணின கட்டளையாக நினிவே எங்கும் அறிவித்தான்.


கர்த்தர் மனஸ்தாபப்பட்டு கோபத்தை விட்டு திரும்புவார் என விசுவாசித்தார்கள்.

யோனா 3:10 "ஜனங்களுடைய விண்ணப்பத்தை கேட்டு அவர்களுடைய கிரியைகளை பார்த்த கர்த்தர் " தம் அவர்களுக்கு செய்வேன் என சொல்லியிருந்த தீங்கை குறித்து மனஸ்தாபப்பட்டு அதைச் செய்யாதிருந்தார் .


ஒரே ஒரு தீர்க்கதரிசனமான " இன்னும் நாற்பது நாள் உண்டு. அப்பொழுது நினிவே கவிழ்க்கப்படும். " என்று கர்த்தர் சொன்னதை யோனா எழுந்து பொய் பிரசங்கித்ததால் ஜனங்கள் மனந் திரும்பி கர்த்தரிடம் வந்ததால் ரட்சிக்கபபட்டார்கள்.


ஆகையால் தான் சின்ன தீர்க்கதரிசன நூல் என அழைக்கின்றனர். பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசன நூல்களை 1)பெரிய தீர்கதரிசன நூல்கள் 15( ஏசாயா முதல் தானியேல் வரை 2)சிறிய தீர்க்கதரிசன நூல்கள் 12(ஓசியா முதல் மல்கியா வரை ) என பிரித்துப் படிக்கலாம்.

தீர்க்கதரிசன நூல்களில் யோனா நூல் ஒரே ஒரு தீர்க்கதரிசனமான "இன்னும் நாற்பது நாள் உண்டு அப்பொழுது நினிவே கவிழ்க்கப்படும் " என்பதை மையமாக கொண்டுள்ளது.


ராஜாவுக்கு பிரசங்கம் பண்ணும் அளவிற்கு யோனாவின் வார்த்தைகள் இருந்தன. மனந்திரும்புதலுக்கு ஏற்ற சின்னப் பிரசங்கம் " மனந் திரும்பி கர்த்தரிடம் வாருங்கள் , ரட்சிக்கப்படுவீர்கள் "


கர்த்தர் நம்மிடம் உணர்த்தும் வார்த்தைகளை பேசும் போது மக்கள் விடுதலையும் ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொள்வார்கள்.

இரண்டாவதாக யோனாவின் வாழ்க்கையில் நாம் காண்பது ,ஆசிரிய ஜனங்களிடம் இருந்த கசப்பு உணர்வு. இஸ்ரவேல் ஜனங்கள் அசீரியாவில் அடிமைகளாக இருந்தார்கள். இந்த கசப்பு உணர்வு தான் யோனாவை கர்த்தர் சொன்ன போது நினிவேக்குப் போக விடாமல் தடுத்தது.
கர்த்தர் சொன்னதை கேட்காமல் தர்ஷீசுக்குப் போனான். கர்த்தர் சர்வ வல்லவர். மறு[படியும் நினிவேக்குப் போக வைத்தார். தர்ஷீசுக்கு போன கப்பலில் இருந்து கடலுக்குள் எறியப்பட்டான். மீன் யோனாவை விழுங்கியது. அதன் பிறகு மீன் வயிற்றிலிருந்து ஜெபித்ததை கர்த்தர் கேட்டார். மீனை யோனாவை காக்கும்படி கட்டளையிட்டார். மீன் அவ்வாறே செய்தது. பிறகு தான் நினிவேக்கு போய் பிரசங்கித்தார்.


கர்த்தர் மனஸ்தாப்பட்டு தம் ஜனங்கள் மீது வர இருந்த தீங்கை நீக்கினார்..

Monday, June 8, 2009

மரியான் உபதேசியார்

மரியான் உபதேசியார் கடந்த நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்தவர் .எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் .தாழ்மைக் கோலம் கொண்டார். ஆண்டவர்க்காக உற்சாகமாக பல இடங்களில் பணியாற்றினார் . பல இனிய பாடல்களை எழுதினார்.

அவர் தொழுநோயால் பதிக்கப் படிருந்தாலும், ஆண்டவர் மேல கொண்டிருந்த பற்றை விடாமல் ஊழியம் செய்தார். கிறிஸ்துவுக்குள் சாதி வேற்றுமை பாராட்டுவது தவறு என்று ஆணித் தரமாக எடுத்துக் கூறினார். பரவலாக விளங்கிய இச் சமுக சீர்கேட்டை கடிந்து சமுக சீர் திருத்தவாதியாக விளங்கினார் .
'தோத்திரம் புகழ் கீர்த்தனம் ", "சுந்தர பரம தேவ மைந்தன் ', இந்நாள் ரட்சிப்புக்கேற்ற நாள் ", என் ஐயா தினம் உன்னை நம்பி நான் ", ஐயையா நான் வந்தேன் ",நம்பி னேன் உம தடிமை நான் ",புத்தியாய் நடந்து வாருங்கள் ",கர்த்தரின் பந்தியில் வா ",ஆறுதல் அடை மனமே " போன்ற பாடல்களை எழுதினார்.