Monday, June 8, 2009

மரியான் உபதேசியார்

மரியான் உபதேசியார் கடந்த நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்தவர் .எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் .தாழ்மைக் கோலம் கொண்டார். ஆண்டவர்க்காக உற்சாகமாக பல இடங்களில் பணியாற்றினார் . பல இனிய பாடல்களை எழுதினார்.

அவர் தொழுநோயால் பதிக்கப் படிருந்தாலும், ஆண்டவர் மேல கொண்டிருந்த பற்றை விடாமல் ஊழியம் செய்தார். கிறிஸ்துவுக்குள் சாதி வேற்றுமை பாராட்டுவது தவறு என்று ஆணித் தரமாக எடுத்துக் கூறினார். பரவலாக விளங்கிய இச் சமுக சீர்கேட்டை கடிந்து சமுக சீர் திருத்தவாதியாக விளங்கினார் .
'தோத்திரம் புகழ் கீர்த்தனம் ", "சுந்தர பரம தேவ மைந்தன் ', இந்நாள் ரட்சிப்புக்கேற்ற நாள் ", என் ஐயா தினம் உன்னை நம்பி நான் ", ஐயையா நான் வந்தேன் ",நம்பி னேன் உம தடிமை நான் ",புத்தியாய் நடந்து வாருங்கள் ",கர்த்தரின் பந்தியில் வா ",ஆறுதல் அடை மனமே " போன்ற பாடல்களை எழுதினார்.

No comments:

Post a Comment