Tuesday, November 17, 2009

ஞா.சாமுவேல்

அருள் திரு ஞா.சாமுவேல் ஐயர் தரங்கம்பாடி மற்றும் பெங்களூர் இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். தன வாழ்கையில் தொடர்ந்து வந்த துன்பங்களால் சோர்வுற்று ,ஒரு மாலை மயங்கும் வேலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது, பாதையில் கிடந்த காகிதத் துண்டில் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது.

அப்பொழுது யோபுவின் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தார். தன வாழ்க்கையை யோபுவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அணைத்து பாடுகளின் மத்தியிலும் மனந் தளராது இவ்வாறு சாட்சி பகர்ந்த யோபுவின் வாழ்க்கை அவருக்கு புத்துணர்ச்சி அளித்தது. இப்பாடலை எழுதினார். அவர் எழுதிய பிற பாடல்கள் குணப்பாடு பாவி ஆகியவை ஆகும்

Monday, November 16, 2009

பிரிக்கன்ரிஜ்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ,யாழ்பாணத்தில் கொலைக் குற்றதிற்காகத தூக்குத் தண்டனை பெற்ற கைதி தான் பிரிக்கன்ரிஜ் என்பவர். அவரை சிறைச் சாலையில் நற்செய்திப் பணி அறிவிக்கும் ஒருவர் சந்தித்து இயேசு உங்ககளை நேசிக்கிறார் என்று கூறிய போது உண்மை தானா என்று வினவினார். நற்செய்திப் பணியாளர் இப்புத்தகத்தில் உள்ள அனைத்தும் உண்மையே என்று வேதப் புத்தகத்தைக் காட்டினார்.
பல வாரங்கள் இருவரும் வேத புத்தகத்தை வாசித்து சிந்தித்தனர். தூக்குத் தண்டனை நிறைவேறும் நாளுக்கு முன்னர் ,அக்கைதி ஆண்டவரை ஏற்றுக் கொண்டு, ஞானஸ்தானம் பெற்று பிரிக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.
அவரைத் தூக்கிலிட்ட பின் அவரது உடமைகளை எடுத்துச் செல்ல அவரது உறவினர்கள் வந்தபோது தலையணைக்குக் கீழே இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார் என்ற பாடல் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது .இது 1தீமோத்தேயு 1:15 வை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.