பத்தொன்பதாம் நூற்றாண்டில் ,யாழ்பாணத்தில் கொலைக் குற்றதிற்காகத தூக்குத் தண்டனை பெற்ற கைதி தான் பிரிக்கன்ரிஜ் என்பவர். அவரை சிறைச் சாலையில் நற்செய்திப் பணி அறிவிக்கும் ஒருவர் சந்தித்து இயேசு உங்ககளை நேசிக்கிறார் என்று கூறிய போது உண்மை தானா என்று வினவினார். நற்செய்திப் பணியாளர் இப்புத்தகத்தில் உள்ள அனைத்தும் உண்மையே என்று வேதப் புத்தகத்தைக் காட்டினார்.
பல வாரங்கள் இருவரும் வேத புத்தகத்தை வாசித்து சிந்தித்தனர். தூக்குத் தண்டனை நிறைவேறும் நாளுக்கு முன்னர் ,அக்கைதி ஆண்டவரை ஏற்றுக் கொண்டு, ஞானஸ்தானம் பெற்று பிரிக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.
அவரைத் தூக்கிலிட்ட பின் அவரது உடமைகளை எடுத்துச் செல்ல அவரது உறவினர்கள் வந்தபோது தலையணைக்குக் கீழே இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார் என்ற பாடல் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது .இது 1தீமோத்தேயு 1:15 வை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.
பயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265
8 years ago
1 comment:
please develop this website so that we are able to get details of all the tamil christian keerthanaigal authors.
Post a Comment